பூமிக்கடியில் கேஸ் குழாய் பதிக்க பாதுகாப்பு கேட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

பூமிக்கடியில் கேஸ் குழாய் பதிக்க பாதுகாப்பு கேட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம்- தூத்துக்குடி குழாய் வழியே கேஸ் கொண்டுச்செல்லும் திட்டத்திற்காக பூமிக்கடியில் குழாய் பதிக்க போலீஸ் பாதுகாப்பு கேட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் கவுதமன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு (கேஸ்) கொண்டு செல்லும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக 142 கி.மீ தூரத்திற்கு பைப்லைன் அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசல் கிராமத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து முள்ளக்காடு கிராமத்தில் சுமார் 2.4 கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டும்.

ஆனால் பொட்டல்காடு கிராமத்தில் பூமிக்கடியில் குழாய் பதிக்க ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, திட்டத்தை விரைந்து முடிக்க முள்ளக்காட்டில் பைப்லைன் பதிக்கும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார். முள்ளக்காடு கிராமத்தினர் சார்பில் தங்களையும் வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விசாரணையை ஆக. 13-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in