இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: சிவகங்கையில் அந்தரத்தில் தொங்கிய மின் கம்பத்தை மாற்றிய மின் வாரிய ஊழியர்கள் 

இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: சிவகங்கையில் அந்தரத்தில் தொங்கிய மின் கம்பத்தை மாற்றிய மின் வாரிய ஊழியர்கள் 
Updated on
1 min read

இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலியால் சிவகங்கையில் அந்தரத்தில் தொங்கிய மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை மின் ஊழியர்கள் ஊன்றினர்.

சிவகங்கையில் பெரும்பாலான இடங்களில் இரும்புக் கம்பியால் ஆன மின் கம்பங்கள் உள்ளன. அந்த மின் கம்பங்களை ஊன்றி 50 ஆண்டுகள் மேலானநிலையில், பல மின் கம்பங்கள் துருபிடித்து சேதமடைந்து விழும்நிலையில் உள்ளன.

இந்நிலையில் மேலரதவீதி, வ.ஊ.சி தெரு சந்திப்பில் உள்ள ஒரு மின் கம்பம் அடிப்பகுதி சேதமடைந்து அந்தரத்தில் தொங்கியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அங்கு வந்த 2 மின் ஊழியர்கள், அந்தரத்தில் தொங்கிய மின் கம்பத்தை ஏற்கனவே இருந்த இடத்தில் நிறுத்தி வைத்து, அசையாமல் இருக்க கம்பிகளால் முட்டுக் கொடுத்துச் சென்றனர்.

மின்கம்பம் விழும்நிலையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடி வந்தனர். இதுகுறித்து ஜூலை 29-ம் தேதி இந்து தமிழ் ஆன்லைனில் செய்தி வெளியானது.

இதையடுத்து இன்று சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை மின் ஊழியர்கள் ஊன்றினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in