Published : 30 Jul 2020 03:40 PM
Last Updated : 30 Jul 2020 03:40 PM

மதுரையில் கரோனா பாதித்தவர்களில் 75% பேர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் உதயகுமார் தகவல்

"தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கையால் மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று நோயிலிருந்து 75% பேர் குணமடைந்துள்ளனர் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்" என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11,67,500 ரூபாய் மதிப்பில் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வண்ணம் பல்வேறு போர்க்கால நடவடிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் பின்பற்றும் வண்ணம் செயல்படுத்தி வருகிறார்.

இந்த கோவிட் காலத்தில் தேவையான பொதுமுடக்கங்களை பாதுகாப்பாக, கவனமாக தொடர்ந்து ஆறாவது முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகம் முழுவதும் 24 லட்சம் மேற்பட்ட நபர்களுக்கு கோவிட் பரிசோதனை சோதனை செய்யப்பட்டுள்ளது நாளொன்றுக்கு 60,000 மேற்பட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரிசோதனை எண்ணிக்கை அதிகமாகும்.

முதல்வர் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் கள நிலவரங்களை கேட்டறிந்து அதற்குரிய அறிவுரை வழங்கி வருகிறார்

மேலும் வீடுவீடாக காய்ச்சல் முகாமினை முதலல்வர் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை7,343 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு இதில் 2,98,874 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது இதில் சளி பரிசோதனை மட்டும் 34,638 நபர்களுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்10,618 நபர்கள் இதில் குணமடைந்தவர்கள் 7,995 நபர்கள் ஏறத்தாழ மதுரை மாவட்டத்தில் மட்டும் 75 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் இதன்மூலம் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நோய்க்கு அருமருந்து முகக்கவசம் ஆகும் அதை தமிழகத்திலுள்ள 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா இரண்டு முகக்கவசம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார் வருகின்ற 5-ஆம் தேதி முதல் மக்களுக்கு இது வழங்கப்பட உள்ளது.

இந்த முகக்கவசம் பரிசோதனை கூடங்களில் தரம் பார்த்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கவசத்தை துவைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் இந்தத் திட்டம் இந்தியாவில் எங்கும் கிடையாது.

இத்திட்டத்தின் மூலம் முதல்வர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

மேலும் சிறு குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோர்களுக்குத் தேவையான ஊக்கத்தை முதல்வர் அளித்து வருகிறார். மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.200 கோடி வரை நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் பணி செய்ய அவர்களுக்குத் தேவையான பரிசோதனை செய்து பணி செய்ய தேவையான அறிவுரை முதல்வர் வழங்கியுள்ளார்.

விழிப்புணர்வு நடவடிக்கைகளும், அதேபோல் தொழில் நிறுவனங்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப்பட்டா முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளும், அதேபோல் தற்போது தென்மேற்கு பருவ மழையில் தற்போது மழைநீரால் சாலைகளில் நீர்த்தேக்கம் ஏற்படும்பொழுது அதன் மூலம் டெங்கு போன்ற நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளும் ஆகிய பணிகள் முதல்வர் வழிகாட்டுதல்படி மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x