

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தில், தனிநபர் கடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம், சிறுகடனாக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வழங்கப்படும். அதேபோல், சுயஉதவிக் குழுவுக்கு ஒரு நபருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ஒரு குழுவுக்கு ரூ.15 லட்சம், கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரையும் கடனுதவி வழங்கப்படும்.
இந்த கடன் திட்டங்களில் பயன்பெற விரும்புவோரின் குடும்பஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பத்தாரரின் வயது 18 முதல் 60 வயதுவரை இருக்கவேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
இதில் பயன்பெற விரும்பும்பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருவள்ளூரில் உள்ளகூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அனைத்துநகர கூட்டுறவு வங்கி கிளைகள்மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறுசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.