Published : 30 Jul 2020 07:29 AM
Last Updated : 30 Jul 2020 07:29 AM

வியாபாரிகள் பாதிப்பதால் கோயம்பேடு சந்தை திறக்கும் தேதியை அறிவிக்க வேண்டும்: முதல்வரிடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

சென்னை

கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்..தியாகராஜன் தலைமையிலான நிர்வாகிகள், முதல்வர் பழனிசாமியை நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் 1,985 காய்கறி கடைகள், 992 பழக்கடைகள், 472 மலர் கடைகள், 492 மளிகை கடைகள் என மொத்தம் 3,941 கடைகள் இயங்கி வந்தன. இவற்றை நம்பி நேரடியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

10 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள், சென்னை, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரும் பயன்பெற்று வருகின்றனர். கோயம்பேடு சந்தை மூடப்பட்டதில் இருந்து கடந்த 3 மாதங்களாக இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இக்குடும்பங்கள் அழிந்துவிடும். எனவே விரைவாக சந்
தையை திறக்கும் தேதியை வெளியிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x