கரோனா தடுப்பு விழிப்புணர்வுக்காக கோவில்பட்டியில் புலி முகமுடி அணிந்து முகக்கவசங்கள் வழங்கல்

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் புலிகள் முகமுடி அணிந்து கரோனா தடுப்பு முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் புலிகள் முகமுடி அணிந்து கரோனா தடுப்பு முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Updated on
1 min read

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் புலிகள் முகமுடி அணிந்து கரோனா தடுப்பு முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இயற்கை வளங்களைp பாதுகாக்கவும். அழிந்துவரும் புலி இனங்களை பாதுகாக்கவும் ஜூலை 29-ம் தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டும், கரோனா வைரஸ் பரவல் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், கோவில்பட்டியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் புலி முகமுடி அணிந்து சிலம்பாட்டம் ஆடியபடி பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க சாலை பாதுகாப்பு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், சிந்தாமணி நகர் வளர்ச்சி குழு தலைவர் பால்ராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in