Last Updated : 29 Jul, 2020 05:41 PM

 

Published : 29 Jul 2020 05:41 PM
Last Updated : 29 Jul 2020 05:41 PM

நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தப் பணியாளர் பாக்கியலட்சுமிக்கு பணியின்போது நுண் உரம் பிரிக்கும் இயந்திரத்தில் பழுது சரி பார்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் வலது கை துண்டிக்கப்பட்டது.

இதற்கு நிவாரணமாக பாக்கியலட்சுமிக்கு 25 லட்சம் ரூபாயும், மாநகராட்சி சார்பில் பணி நிரந்தரமும், ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் குப்பைகளை மக்க செய்து உரம் தயாரிக்கும் திட்டம் அமலில் உள்ளது. இதற்காக அனைத்து மண்டலங்களிலும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் செயல்படுகிறது. இங்கு மக்கும் குப்பைகள் இயந்திரங்கள் மூலம் உரமாக மாற்றப்படுகிறது.

மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட என்ஜிஓ காலனியில் உள்ள மையத்தில் இயந்திரம் மூலம் குப்பைகளை பிரித்து எடுத்து உரமாக்கும் பணியில் நேற்று ஈடுபட்டபோது பாக்கியலட்சுமி என்ற ஒப்பந்த துப்புரவுப் பணியாளரின் வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கு ரூ. 25 லட்ச நிவாரண உதவி வழங்க வேண்டும். அவரை மாநகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர் பணி நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் காப்பீடு மாநகராட்சி மூலம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பெருமாள்புரத்திலுள்ள அலகு அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

துப்புரவு பணியாளர்களுக்கு நுண் உரம் தயாரிப்பு பணியில் போதிய பயிற்சி கொடுக்கப்படவில்லை என்றும் பயிற்சி கொடுக்காமலே தங்களை இந்த பணியில் மாநகராட்சி நிர்வாகம் பணியாற்ற நிர்ப்பந்திக்கிறது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். நுண் உரம் தயாரிப்பு பணியில் ஆண் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x