கோவை நஞ்சுண்டாபுரத்தில் 50 அடி உயர ‘வேல்’ கட்அவுட்: பொதுமக்கள் வழிபாடு; போலீஸார் விசாரணை

கோவை நஞ்சுண்டாபுரத்தில் 50 அடி உயர ‘வேல்’ கட்அவுட்: பொதுமக்கள் வழிபாடு; போலீஸார் விசாரணை
Updated on
1 min read

கோவையில் 50 உயரத்தில் `வேல்' வடிவத்தில் கட்அவுட் வைக்கப் பட்டு, பொதுமக்கள் வழிபாடு நடத் தினர். இது தொடர்பாக போத்தனூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஒரு மின் கம்பத்தில் சுமார் 50 அடி உயர ‘வேல்’ வடிவ கட்அவுட் பொருத்தப்பட்டிருந்தது. அப்பகுதி மக்கள் சிலர் அதற்கு வழிபாடு நடத்தினர். தகவலறிந்த போத்தனூர் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும், மின் கம்பத்தில் பொருத் தப்பட்டிருந்த ‘வேல்’ வடிவ கட் அவுட் அகற்றப்பட்டு, அருகே யுள்ள கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது.

இதுதவிர, சீரநாயக்கன்பாளை யம், கரும்பு உற்பத்தி மையம் சாலை, கோவில்மேடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, போத்தனூர் பிரதான சாலை, பொள்ளாச்சி பிரதான சாலை, போத்தனூர் நாச்சிமுத்து கவுண்டர் வீதி உள்ளிட்ட இடங்களில் சாலைகள், சுவர்களில் ‘வேல்’ வடிவம் வரையப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகி விக்னேஷ்(26), ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுரேஷ்(40), சீரநாயக்கன்பாளையம் சதீஷ் குமார்(36), சக்திகேந்திரா ஓம் ஆனந்தகுமார்(48), இந்து முன் னணி ஆனந்த், பாஜக-வை சேர்ந்த உதயசூரியன், மதிவாணன், பாபுராஜ் ஆகியோர் மீது, தொற்று நோய் தடுப்புச் சட்டம், பொது சுகா தாரச் சட்டம், தமிழ்நாடு பொது இடங்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஆர்.எஸ்.புரம், சாய்பாபாகாலனி, ரத்தினபுரி, போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in