நாச்சியார்கோவிலில் கல் கருடனுக்கு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருடனுக்கு நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருடனுக்கு நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் முழுமையாக நீங்க வேண்டி, கல் கருடனுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நாச்சியார்கோவிலில் உள்ள மஞ்சுளவல்லி சமேத சீனிவாசப் பெருமாள் கோயிலில், பங்குனி மற்றும் மார்கழி மாதம் என ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 4-ம் திருநாள் கல் கருட சேவை நடைபெறுவது வழக்கம். கருடனின் ஜென்ம தினமான ஆடி சுவாதியை முன்னிட்டு, நேற்று சகஸ்ரநாம அர்ச்சனை, கருட மூலமந்திரம், ஹோமம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அப்போது, உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் முழுமையாக நீங்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in