அதிமுகவுக்கு கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆதரவு

அதிமுகவுக்கு கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆதரவு
Updated on
1 min read

தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு நிறுவனர் பிஷப் ஆர்.பால்ராம மூர்த்தி சென்னையில் நிருபர்கள டம் புதன்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் 500 பேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ சிறுபான்மை இளைஞர்கள், இளம் பெண்கள் சிறுபான்மை மேம்பாட்டு கழகம் மூலம் அதிக அளவு கடன் உதவி பெறும் வகையில் இந்த நிறுவனத்துக்கான மூலதனத்தை ரூ.8.5 கோடியாகவும், கடன் தொகையை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா தான்.

இவ்வாறு கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்துவரும் காரணத்தினால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளி்த்து தமிழகம் முழுவதும் பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டமைப்பு நிர்வாகிகள் பிஷப் வேதா, பிஷப் பால்நடராஜ், பிஷப் சாது பீட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in