

கந்தசஷ்டி கவசம் குறித்து தரக்குறைவாக விமர்சித்து ஒரு யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, யூ-டியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த செந்தில்வாசனை (49) கைது செய்தனர்.
இதன்பிறகு, அவதூறு வீடியோவின் தொகுப்பாளர் சுரேந்தர் (33), ஓட்டேரி சோமசுந்தரம், மறைமலைநகர் குகன் ஆகியோர் நீதிமன்றக் காவலில் அடுத்தடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், செந்தில்வாசனை 4 நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, சுரேந்தர் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், செந்தில்வாசன் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.