Published : 29 Jul 2020 07:36 AM
Last Updated : 29 Jul 2020 07:36 AM

2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த 72 சதவீத நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டுநடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த 72 சதவீத நிறுவனங்கள், வணிகரீதியில் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ரூ.3 ஆயிரத்து 185கோடி முதலீட்டில் 6 ஆயிரத்து 955பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இந்த 11 திட்டங்களில் 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலி யில் தொடங்கி வைக்கப்பட்டன.

l காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேபிடல் லேண்டு தொழிற்பூங்காவில் ரூ.730 கோடி முதலீட்டில் 875 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த டிபிஐ காம்போசிட்ஸ் நிறுவனத்தின் காற்றாலை இறக்கை உற்பத்தி திட்டம்.

l காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரூ.608 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் குளோவிஸ் ஹூண்டாய் நிறுவன வாகன உதிரி பாகங்கள் திட்ட தொழிற்பிரிவு.

l காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூரில் ரூ.500 கோடி முதலீட்டில் 2 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ஜப்பானைச் சேர்ந்த சோஜிட்ஸ் மதர்சன் நிறுவன தொழிற்பூங்கா திட்டம்.

l விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ரூ.350 கோடி முதலீட்டில் 625 பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் ராஜபாளையம் மில்ஸ் நிறுவனத்தின் டெக்ஸ்டைல் பேப்ரிக்ஸ் உற்பத்தி திட்டம்.

l திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.220கோடி முதலீட்டில் 300 பேருக்குவேலை அளிக்கும் கல்ப் ஆயில்நிறுவனத்தின் ஆயில் லூப்ரிக்கென்ட்ஸ் திட்ட தொழிற்சாலை.

l காஞ்சிபுரத்தில் ரூ.80 கோடி முதலீட்டில் 100 பேருக்கு பணி அளிக்கும் ஜெமெடாடீ நிறுவனத்தின் கிடங்கு.

l செங்கல்பட்டில் ரூ.75 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைஅளிக்கும் ஹைப்ரோ ஹெல்த்கேர் நிறுவன மருந்து, மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம்.

l செங்கல்பட்டு, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில், ரூ.24 கோடி முதலீட்டில் 330 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் டிசிஎஸ் நிறுவன தகவல் தொழில்நுட்ப சேவைகள் திட்டம்.

l நாமக்கல், திருச்செங்கோட்டில் ரூ.451 கோடியில் 1,150 பேருக்கு பணி அளிக்கும் வகையில், மோதிஸ்பின்னர்ஸ் லக்கி யார்ன் டெக்ஸ்மற்றும் லக்கி வீவ்ஸ் நிறுவனங்களின் நூல் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டம்.

l திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட்டில் 75 பேருக்கு பணி அளிக்கும் வகையில், மஹிந்திரா ஸ்டீல் சர்வீசஸ் நிறுவன வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.

l காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், ரூ.47 கோடியில்950 பேருக்கு பணி அளிக்கும் டீமேஜ் பில்டர்ஸ் நிறுவன கட்டுமான பொருள் உற்பத்தி திட்டம்.

முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த 11 திட்டங்களின் மூலம், தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரத்து 185 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 6 ஆயிரத்து 955 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

11 திட்டங்களில் 2 திட்டங்கள்2015-ல் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டவையாகும்.

கடந்த 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3லட்சத்து 501 கோடியில் முதலீடுகள்மற்றும் 10 லட்சத்து 50 ஆயிரம்பேருக்கு பணி வாய்ப்பு அடிப்படையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள 8 திட்டங்களையும் சேர்த்து இதுவரை 81 திட்டங்கள், அதாவது 26.64% திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன. மேலும், 62.82% அதாவது 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில்செயல்பாட்டில் உள்ளன. மொத்தம் 304 திட்டங்களில் 272 திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன.

கடந்த 2015 உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடு மற்றும் 4 லட்சத்து 70 ஆயிரத்து 85 பேருக்குவேலைவாய்ப்பு என்ற வகையில்98 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2 திட்டங்கள் சேர்த்து, 44 திட்டங்கள் நிறைவு பெற்று வணிக உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 27 திட்டங்கள் பல்வேறு நிலையில் செயல்பாட்டில் உள்ளன. மொத்த திட்டங்களில் 72 சதவீத திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x