காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி தெருவில் தஞ்சமடைந்த கூலித்தொழிலாளி

காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி தெருவில் தஞ்சமடைந்த கூலித்தொழிலாளி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கரோனா அறிகுறியுடன் வெளியேறிய கூலித்தொழிலாளி தெருவில் தஞ்சமடைந்தார்.

காரைக்குடி சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயது கூலித்தொழிலாளிக்கு தொடர் காய்ச்சல் , தொண்டை வலி, இருமல் இருந்தது. தனது குடும்பத்தாருக்கு பாதிப்பு ஏற்படமால் இருக்க வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்தார்.

இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் நகராட்சி, சுகாதரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். யாரும் அழைத்து செல்ல வராதநிலையில் அங்கிருந்தோர் கூலித்தொழிலாளியை ஆட்டோவில் ஏற்றி காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கூலித் தொழிலாளி மீண்டும் தெருவிலேயே தஞ்சமடைந்தார்.

இதனால் அவ்வழியே பொதுமக்கள் அச்சத்துடன் பயனித்து வருகின்றனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி கூறுகையில், ‘‘மருத்துவமனையில் சேர்த்தாலும் வெளியேறி விடுகிறார். மீண்டும் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in