Published : 28 Jul 2020 18:01 pm

Updated : 28 Jul 2020 18:01 pm

 

Published : 28 Jul 2020 06:01 PM
Last Updated : 28 Jul 2020 06:01 PM

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரி; இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

degree-courses-in-mgr-film-institute
கோப்புப்படம்

சென்னை

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:


"எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

இந்நிறுவனம் தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, 2016-2017 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று, கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென இளங்கலை-காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது.

தற்போது, 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. இளங்கலை - காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) - Bachelor of Visual Arts (Cinematography)

2. இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)

4. இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5. இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)

6. இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ) - Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை 30.07.2020 முதல் 26.08.2020 வரை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் www.tn.gov.in எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் 01.09.2020 அன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் (பொ), எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வர வேண்டாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனம்தமிழக அரசுகவின் கலை கல்லூரிஇளங்கலை பட்டப் படிப்புகள்திரைப்பட படிப்புகள்MGR film instituteTamilnadu governmentFine arts collegeONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author