விதிமீறல் கட்டிட விவகாரம்: 2 வழக்கறிஞர்கள், அரசியல்வாதிக்கு உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு
சென்னை சவுகார்பேட்டையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பான வழக்கில், இரண்டு இளம் வழக்கறிஞர்கள் 3 மாதம் மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி எடுக்கவும், அரசியல்வாதியான மற்றொருவர் ஆதிதிராவிடர் நல விடுதியில் பணிபுரியவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை ஜார்ஜ் டவுன், சவுகார் பேட்டையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏராளமாக இருப்ப தாகவும் அவற்றின் உரிமையாளர் கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அண்மையில் சவுகார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு சீல் வைக்கச் சென்ற அதிகாரிகளை வழக்கறிஞர்கள் என்று கூறிக்கொண்டு கும்பல் ஒன்று மிரட்டியுள்ளது. இந்த தகவல் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அந்த வீட்டின் உரிமையாளர்களான 2 பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி அதிகாரிகளை மிரட்டியவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரி களை மிரட்டிய 2 வழக்கறிஞர்கள், ஒரு அரசியல்வாதி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசா ரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு இளம் வழக்கறிஞர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர். அதை ஏற்கிறோம். இருவரும் மூத்த வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர் அவர்களுக்கு வழக்கறிஞர் தொழிலின் தர்மம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
அரசியல்வாதியான மற்றொரு வர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் ஐந்து நாட்களுக்கு தினமும் மூன்று மணி நேரம் தன் னார்வ பணியைச் செய்ய வேண்டும். அந்தப் பணியைச் செய்ததற்கான சான்றிதழை விடுதிப் பொறுப்பாள ரிடம் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளர் விதிமீறி கட் டப்பட்டதாகக் கூறப்படும் தனது வீட்டை வரைமுறைப்படுத்துவதற் காக மேல்முறையீடு செய்திருப்ப தால், வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை செயலாளர் அவர்களை இருவாரங்களுக்குள் அழைத்து அந்த கட்டிடத்தில் எதை வைத்துக்கொள்ளலாம், விதிமீறி கட்டியதால் எதை இடிக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
