

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பல்லடம் அருகே மாதப்பூரில் நேற்று நடந்த விடியல் மீட்புப் பேரணி பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:
முதலை வாயில் அகப்பட்ட சிறுவனை மீட்க சுந்தர மூர்த்தி நாயனார் எப்படி பாடு பட்டாரோ, அதேபோல் நாம் அனைவரும் தமிழகத்தை மீட்கப் பாடுபட வேண்டும். தற்போது நடைபெறும், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடந்த 8 நாட்களில் 6 நாட்கள் முதல்வர் வந்துள்ளார். அதிலும், கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் வருகி றார். 110 அறிக்கையை படிக்கிறார். அமைச்சர்கள் துதி பாடுகிறார்கள் இதுதான் தொடர்ந்து நடக்கிறது.
வீடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் கொடுத்தது திமுக. மத்திய அரசிடம் ஒரு திட்டத்துக்காக, போராடி வாதாடு கிற நிலையில் அதிமுக அரசு உள்ளதா? ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசிடம் போராடி, வாதாடி திட்டங்களைப் பெறும். கோவையில் மோனோ ரயில் விடப்படும் என்றார்கள். அதற்கான அடிப்படை வேலைகள் கூட நடக்கவில்லை. பூஜ்ய நிலை சுத்திகரிப்பு குறித்து ஜெய லலிதாவை போல், அமைச்சரும் முழுப் பொய் சொல்கிறார். சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ள மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலைமாற வேண்டும்; மாற்ற வேண்டும். காவல்துறையின் சுதந்திரம் மீட்கப்பட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் அணைகள், கண்மாய்கள், கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை. அப்துல்கலாம் மறைவுக்குச் செல்லாதவர் பிரதமர் வந்ததும், விமான நிலையம் நோக்கி சுயநலத்துடன் செல்கிறார். மதுவிலக்கு பற்றி சட்டப் பேரவையில் பேச அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்படும். கருணாநிதியின் வாக்கு என் றைக்கும் பொய்க்காது.
இங்குள்ள தொழிலதிபர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விட்டு, தற்போது 4 ஆண்டு கள் கழித்து சர்வதேச முதலீட் டாளர்களை ஈர்க்கும் மாநாடு நடத்து வதாக ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும். புதிய முதலீடுகளை உண்மையிலேயே ஈர்க்கும் வகையிலும், தொழில் நிறுவனங்கள் அனுமதி பெற ஊழலற்ற எளிய முறையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும். செப். 20-ம் தேதி நமக்கு நாமே திட்டம் மூலம், 3 கட்ட பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று ஸ்டாலின் பேசினார்.