செங்கோட்டை அருகே ஆட்டோ - லாரி மோதி 6 பேர் பலி: திட்டமிட்ட கொலையா என போலீஸ் விசாரணை

செங்கோட்டை அருகே ஆட்டோ - லாரி மோதி 6 பேர் பலி: திட்டமிட்ட கொலையா என போலீஸ் விசாரணை
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே ஆட் டோ மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் நேற்று உயிரிழந்தனர். இச்சம்பவம் திட்டமிட்ட கொலையாக இருக் கலாம் என போலீஸார் சந்தே கிக்கின்றனர்.

செங்கோட்டை அருகே புளி யரையில் உள்ள தட்சிணா மூர்த்தி கோயிலுக்கு வியாழக் கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் செல்வர். நேற்று காலை இக்கோயிலுக்கு சென்ற பக்தர்களை, செங்கோட்டை கற்குடியை சேர்ந்த முப்புலி மகன் ஆட்டோ ஓட்டுநர் கருப்ப சாமி (38), தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றார்.

ஆட்டோவில், மேலப்புதூர் பிள்ளையார் கோயில் தெரு வைச் சேர்ந்த ராமையா மகன் முருகன் (33), லாலாகுடியி ருப்பை சேர்ந்த இசக்கியம்மாள் (70), பூலாங்குடியிருப்பை சேர்ந்த செல்லப்பா மனைவி கனகு (65) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். வழியில் கற்குடியைச் சேர்ந்த வடகாசி மகன் மகேஷ் (35), அடி வெட்டி(60) ஆகியோர் இந்த ஆட்டோவில் ஏறிக்கொண் டனர்.

செங்கோட்டை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், புதூர் பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென ஆட்டோ மீது மோதியது. சிறிது தூரத் துக்கு இழுத்து செல்லப்பட்ட ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோ வில் இருந்த கருப்பசாமி, அடிவெட்டி, முருகன், இசக் கியம்மாள், கனகு ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகேஷ் பலத்த காயமடைந்தார். லாரி ஓட்டுநர் கற்குடியை சேர்ந்த திருமலைக் குமார் தப்பியோடிவிட்டார்.

புளியரை போலீஸாரும், செங்கோட்டை தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட மகேஷ், சிகிச்சை பலனின்றி இறந்தார். இத னால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. லாரி ஓட்டு நர் திருமலைக்குமாரை புளியரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

லாரி ஏற்றி கொலையா?

பலியான அடிவெட்டி, மகேஷ் ஆகியோருக்கும், தப்பியோடிய லாரி ஓட்டுநர் திருமலைக்குமாரின் குடும் பத்தினருக்கும் இடையே குளத்தில் மீன்பாசி குத்தகை ஏலம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. ஏற்கெனவே இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட அடிதடி வழக்கில் அடிவெட்டியும், மகேஷும் நிபந்தனை ஜாமினில் வந்திருந் தனர்.

நேற்று அவர்கள் புளியரை போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட ஆட்டோவில் செல்லும்போதுதான் லாரி மோதி உயிரிழந்துள்ளனர். இதனால் திருமலைக்குமார் வேண்டுமென்றே ஆட்டோ மீது லாரியை மோதியிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் இது உறுதியாகும் பட்சத்தில் இந்த விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் வாய்ப் புள்ளதாக போலீஸ் வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

பலியான அப்பாவிகள்

எனினும், இந்த முன்விரோ தத்தில் தொடர்பில்லாத, கோயிலுக்கு செல்வதற்காக ஆட்டோவில் பயணித்த இசக்கி யம்மாள், கனகு, முருகன் ஆகியோரும், ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியும் பலியானது பரிதாபத்துக்குரியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in