ஊழியர்களுக்கு கரோனா தொற்று: கோவில்பட்டி நீதிமன்றங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை

கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
Updated on
1 min read

கோவில்பட்டி நீதிமன்றங்களில் பணியாற்றும் 5 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்1, எண்2, விரைவு நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 23-ம் தேதி கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், இன்று 5 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1, எண் 2, விரைவு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுரைப்படி கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1, எண் 1, விரைவு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in