

திண்டுக்கல் சின்னாளபட்டி அருகேயுள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள ஒடடுரக முருங்கைச்செடியில், முருங்கைக்காய்கள், வழக்கத்தைவிட அதிக நீளமாக வளர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே சக்கரபாணி என்பவர் தோட்டத்தில் 5 அடி நீளத்திற்கு முருங்கைக்காய் காய்த்துவருகிறது. இதுவழக்கமாக முருங்கைக்காய் நீளத்தை விட அதிகநீளம் கொண்டதாக உள்ளது.
விவசாயி சக்கரபாணி இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் சொட்டுநீர் பாசன முறையில் கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அதிகம் விளைவித்து சாதனைபடைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒட்டுரக முருங்கை செடி நடவுசெய்தார். இப்பொழுது இதில் முருங்கைக்காய்கள் காய்த்து குலுங்குகின்றன.
ஒவ்வொன்றும் 4 அடி மற்றும் 5 அடி நீளம் உள்ளவைகளாக உள்ளன. இவை வழக்கமான முருங்கைக்காய்களை விட நீளம் அதிகம். தினசரி 100 கிலோவிற்கு மேல் முருங்கைக்காய்களை பறித்து விற்பனைக்கு அனுப்பிவைக்கிறார்.
விவசாயி சக்கரபாணி கூறுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒட்டுரக முருங்கைச்செடிகளை எனது தோட்டத்தில் நடவுசெய்தேன் வழக்கத்தைவிட நீளமாக முருங்கைக்காய்கள் விளைந்துள்ளன.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.25 க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ஒரு கிலோ ரூ.40 க்கு விற்பனையாகிறது. நீளமான முருங்கைக்காய்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர், என்றார்.