Published : 27 Jul 2020 06:57 AM
Last Updated : 27 Jul 2020 06:57 AM

ரயில், பேருந்து போக்குவரத்து முடங்கியதால் பழைய வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு

சென்னை

கரோனா ஊரடங்கால் பேருந்து,ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதால் பழைய இருசக்கர மற்றும் கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் சுமார் 4 மாதங்களாக பேருந்துகள், ரயில்கள் முழு அளவில் ஓடவில்லை. இருப்பினும், ஊரடங்கில் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கதொடங்கி விட்டனர்.

இதுதொடர்பாக தனியார் நிறுவன தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதனால் ஏதேனும் வாகனத்தில் பணிக்குச் செல்ல வேண்டியுள்ளது. மாநகரபேருந்துகள், மின்சார ரயில்கள் இல்லாததால், தனியார் வாகனங்களில் 3 மடங்கு வரை அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் அதிக பணம்கொடுத்து புது வாகனம் வாங்க முடியாதால், பழைய வாகனத்தைவாங்கி பயன்படுத்துகின்றனர்’’ என்றனர்.

இதுதொடர்பாக வாகன விற்பனையாளர்கள் சிலர் கூறும்போது,‘‘ஊரடங்குக்கு முன்பாகவே ஆட்டோமொபைல் துறை நெருக் கடியை சந்தித்து வருகிறது. இருசக்கர வாகனம், கார் புதியதாக வாங்க 20 சதவீதத்துக்கும் மேல்முன்பணம் செலுத்த வேண்டுமென தற்போது புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் புதிய வாகனங்கள் வாங்குவதை காட்டிலும், பழைய வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்தில் பழைய வாகனங்கள் வாங்குவது சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x