Published : 27 Jul 2020 06:43 AM
Last Updated : 27 Jul 2020 06:43 AM

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச முகக்கவசம் விநியோகம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணி வதை மேலும் பல மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள னர். இதன்தொடர்ச்சியாக, தமி ழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளின் உறுப்பினர் களுக்கும் மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்தும் வகையில் தலா 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 2 கோடியே 8 லட்சத்து 23,076 குடும்ப அட்டையின் கீழ் வரும், 6 கோடியே 74 லட்சத்து 15,899 உறுப்பினர்களுக்கு தலா 2 முகக்கவசம் வீதம் 13 கோடியே 48 லட்சத்து 798 முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை தொடங் கப்பட்டது.

இதையடுத்து, இந்த முகக் கவசங்களை கொள்முதல் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், பேரிடர் மேலாண்மை இயக்குநர், பொது சுகாதாரத் துறை இயக்குநர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு முகக் கவசங்களை ஆய்வு செய்து, அதற் கான ஒப்பந்தத்தை இறுதி செய் தது. தற்போது 4 லட்சத்துக் கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, முகக் கவசம் வழங் கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

வருவாய்த் துறை சார்பில் முதல் கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள், சென்னை மாநக ராட்சி தவிர இதர மாநகராட்சிகளில் வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்களை நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங் கும் திட்டத்தை முதல்வர் பழனி சாமி ஜூலை 27-ம் தேதி தலை மைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டைதாரர் களுக்கு முகக்கவசம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருக்கும்படி நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.கூட்டுறவுத் துறை பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில், நியாய விலைக் கடை விற்பனை முனைய இயந்திரங்களில் ஒரு நபருக்கு 2 முகக்கவசம் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டணமின்றி முகக்கவசம் வழங்க வேண்டும் என்றும் இதனை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1 முதல் முககவசங்கள் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x