

தஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,892 ஆக அதிகரித்துள்ளது. முழு ஊரடங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 900த்துக்கும் அதிகம். 17 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அங்கு சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகன சோதனைகளுக்காக சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தடையை மீறி பல்வேறு காரணங்களுக்காக இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு போலீஸார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பை வைக்கின்றனர்.
மேலும் சிலர் எந்த ஒரு வேலையும் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் வந்தனர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.