

அதிமுக, அமமுக மற்றும் சசிகலா குறித்து சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசிகலா சிறைவாசம் முடிந்து நிச்சயம் வரத்தான் போகிறார். அவர்கள் சிறையிலிருந்து திரும்பியவுடன்.. என்னுடைய அரசியல் ஆரூடம் என்னவெனில் அமமுகவையும் அதிமுகவையும் இணைத்து விடுவார். இது என்னுடைய அரசியல் ஆய்வே தவிர என் விருப்பம் இல்லை. அப்படி எழுதிடாதீங்க..
அமமுக, அதிமுகவை இணைத்து விட்டு ஒட்டுமொத்த அதிமுக தலைமயும் சசிகலாவிடம் வந்து விடும். கட்சியில் கீழ்மட்டம் வரைக்கும் நிர்வாகிகளை சசிகலா நியமித்துள்ளார்.
ஆகவே என்னைப் பொருத்தவரைக்கும் வெளியே வந்தவுடன் கட்சியை இணைத்துவிட்டு, தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்து விட்டு அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்றுதான் நினைக்கிறேன்.
அடுத்த தேர்தலில் அதிமுக கண்டிப்பாக தோல்வியடையும்.
இவ்வாறு கூறினார் கார்த்தி சிதம்பரம்.