Published : 26 Jul 2020 07:15 AM
Last Updated : 26 Jul 2020 07:15 AM

ஊரடங்கால் வருவாய் இழந்த நிலையில் சுமையான மின்கட்டணம்.. கருணை காட்டுமா மின்வாரியம்?- மறுஆய்வு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கும் மக்கள்

சென்னை

தமிழகத்தில் கடந்த 4 மாத ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால், வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை இழந்த மக்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மார்ச் - ஏப்ரல், மே - ஜூன் மாதங்களுக்கான மின்பயன்பாட்டை மின்வாரியம் கணக்கீடு செய்ததில் குளறுபடி இருப்பதாக
வும், அதனால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கெனவே ஊரடங்
கால் வேலை, வருவாய் இழந்துதவிக்கும் மக்களுக்கு, பன்மடங்கு உயர்ந்த மின்கட்டணம் பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதற்கிடையில், மின்கணக்கீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை மீண்டும் ஆய்வு செய்யக் கோரி மனுதாரர் தரப்பில் மறுஆய்வு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘மின்வாரியம் தற்போது பின்பற்றும் கணக்கீட்டால், நாம் பயன்படுத்தாத யூனிட்களுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்த நேரிடுகிறது. எனவே, 4 மாத மின்கட்டணத்தில், ஏற்கெனவே செலுத்திய மின்கட்டணத்தை கழிப்பதற்கு பதிலாக, 4 மாதம் பயன்படுத்திய யூனிட்டில் இருந்து, ஏற்கெனவே செலுத்திய கட்டணத்துக்கான யூனிட்டை கழிக்க வேண்டும். அதன் பிறகு வரும் யூனிட்களை தனியாக கணக்கிட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மின் நுகர்வோர் ஒருவர் கடந்த ஜனவரி - பிப்ரவரியில் 290 யூனிட் பயன்படுத்தி ரூ.500 மின் கட்டணம் செலுத்தியுள்ளார். மின்
வாரிய அறிவுறுத்தலின்படி கடந்தமார்ச் - ஏப்ரல் மாதத்துக்கும், ஜனவரி - பிப்ரவரி மாதங்களின் கணக்கீட்டு தொகையான ரூ.500-ஐ செலுத்தியுள்ளார். அவர் கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 மாதங்களில் 1,010 யூனிட் மின்சாரம் பயன் படுத்தியுள்ளார்.

அதை இரு 505 யூனிட்களாக பிரித்து தலா ரூ.1,813 கட்டணம் என மொத்தம் ரூ.3,626 கட்டணமாக மின்வாரியம் நிர்ணயித்துள்
ளது. அதில் ஏற்கெனவே செலுத்திய கட்டணம் ரூ.500-ஐ கழித்து, ரூ.3,126-ஐ செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு நிர்ண
யிக்கப்பட்டுள்ள கட்டணம், வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக நுகர்வோர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விதிகளின்படியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் தவறு ஏதும் நடக்கவில்லை என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதையே நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது.

மின்வாரியம் கூறும் கணக்கு விவரங்கள் புரியாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். கடந்த மார்ச் - ஏப்ரல் மாதத்துக்கு
செலுத்திய முந்தைய கட்டணத்துக்கு இணையான யூனிட்டை, 4 மாதம் முழுவதும் எடுக்கப்பட்ட மொத்த யூனிட்டில் கழிக்க
வேண்டும் என்பதே பொதுமக்களின் வாதமாக உள்ளது.

பொதுமக்கள் கூறுவது போல, மேற்கூறிய நுகர்வோர் 4 மாதம் பயன்படுத்திய 1,010 யூனிட்டில், ஏற்கெனவே ரூ.500 கட்டணம் செலுத்தியதற்கான 290 யூனிட்டை கழித்தால் 720 யூனிட் வரும். அதை இரு 360 யூனிட்களாக பிரித்து கணக்கிட வேண்டும். இவ்வாறு செய்தால் இரு ரூ.710 என மொத்தம் ரூ.1,420 மட்டுமே செலுத்த வேண்டி வரும். இதனால், நுகர்வோருக்கு ரூ.1,700 கட்டணம் குறையும்.
பொதுமக்கள் மற்றொரு வாதத்தையும் முன்வைக்கின்றனர். அதன்படி, 4 மாதம் பயன்படுத்திய 1,010 யூனிட்டை இரு 505 யூனிட்களாக பிரித்து, முதல் 505 யூனிட்டில், ஏற்கெனவே ரூ.500 செலுத்தியதற்கு இணையான 290 யூனிட்டை கழிக்க வேண்டும். எஞ்சிய 215 யூனிட்
டுக்கு ரூ.275, 2-வது 505 யூனிட்டுக்கு ரூ.1,813 என மொத்தம் ரூ.2,088 வரும். இதன்மூலம் நுகர்வோருக்கு ரூ.1,000 கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

மின்கட்டணத்தில் விதிமீறல் இருப்பதாக பல்வேறுகட்சிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், இந்த மறுஆய்வு வழக்கின்
தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x