Published : 25 Jul 2020 10:36 PM
Last Updated : 25 Jul 2020 10:36 PM

சென்னையில் 24 மணி நேர தளர்வில்லா ஊரடங்கு; அவசியமின்றி வெளியில் வரவேண்டாம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு    

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு நீடிக்கும், அவசிய காரணமின்றி பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் செய்திக்குறிப்பு:

“சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 25.7.2020 இரவு 12.00 மணி முதல் 27.7.2020ம் தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

அதன்படி 26.7.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 144-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 9003130103 எனும் எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்”.

இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x