Published : 25 Jul 2020 09:51 PM
Last Updated : 25 Jul 2020 09:51 PM

அதிமுகவில் அதிரடி மாற்றம்: மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

அதிமுகவில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்சி வளர்ச்சிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள மாவட்டச்செயலாளர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு:

“அதிமுக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சில மாவட்டங்களை, கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும், மாவட்டச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. காஞ்சிபுரம் மாவட்டம் ஏ. சோமசுந்தரம்,( 1. காஞ்சிபுரம் 2. உத்திரமேரூர் 3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) )

2. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ( 1. திருப்போரூர் 2. மதுராந்தகம் (தனி) )3. செய்யூர் (தனி) )

3. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன்,( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ) (1. தாம்பரம் 2. பல்லாவரம், 3. செங்கல்பட்டு )

4. சென்னை புறநகர் மாவட்டம் கே.பி. கந்தன் (சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் (1. சோழிங்கநல்லூர் 2. ஆலந்தூர் )

5. திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சிறுணியம். பலராமன், ( 1. பொன்னேரி (தனி) (2) 2. கும்மிடிபூண்டி)

6. திருவள்ளூர் மத்திய மாவட்டம் பா. பென்ஜமின், ( 1. மதுரவாயல் 2. பூந்தமல்லி (தனி))

7. திருவள்ளூர் தெற்கு மாவட்டம் ஏ. அலெக்சாண்டர்,(1. அம்பத்தூர் 2. ஆவடி )

8. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் ஏ. மூர்த்தி (1. மாதவரம் 2. திருவொற்றியூர் )

9. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பி.வி. ரமணா, ( 1.திருவள்ளூர் 2. திருத்தணி )

10. வேலூர் மாநகர் மாவட்டம் அப்பு, ( 1. வேலூர் 2. காட்பாடி )

11. வேலூர் புறநகர் மாவட்டம் வேலழகன் ( 1. குடியாத்தம் (தனி) 2. கே.வி.குப்பம்(தனி) 3. அணைக்கட்டு )

12. திருப்பத்தூர் மாவட்டம் கே.சி.வீரமணி,( 1. திருப்பத்தூர் 2. ஜோலார்பேட்டை 3. வாணியம்பாடி 4. ஆம்பூர் )

13. ராணிப்பேட்டை மாவட்டம் ரவி, ( 1. ராணிப்பேட்டை 2. சோளிங்கர் 3. ஆற்காடு 4. அரக்கோணம் (தனி))

14. விழுப்புரம் மாவட்டம் சி.வி.சண்முகம்,( 1. செஞ்சி 2. மைலம் 3. திண்டிவனம் (தனி) 4. வானூர் (தனி) 5. விழுப்புரம் 6. விக்கிரவாண்டி )

15. கள்ளக்குறிச்சி மாவட்டம் இரா. குமரகுரு, (1. திருக்கோயிலூர் 2. உளுந்தூர்பேட்டை 3. ரிஷிவந்தியம் 4. சங்கராபுரம் 5. கள்ளக்குறிச்சி (தனி) )

16. கோவை புறநகர் தெற்கு மாவட்டம் எஸ்.பி.வேலுமணி, (1. தொண்டாமுத்தூர் 2. கிணத்துக்கடவு 3. பொள்ளாச்சி 4. வால்பாறை (தனி) 5. சூலூர்)

17. கோவை மாநகர் மாவட்டம் அம்மன் கே.அர்ச்சுணன் (1. கோயம்புத்தூர் தெற்கு 2. கோயம்புத்தூர் வடக்கு 3. சிங்காநல்லூர் )

18. கோவை புறநகர் வடக்கு மாவட்டம் பி.ஆர்.ஜி. அருண்குமார்,(1. கவுண்டம்பாளையம் 2. மேட்டுப்பாளையம் 3. அவினாசி (தனி) )

19. நீலகிரி மாவட்டம் கப்பச்சி டி.வினோத், (1. உதகமண்டலம் 2. கூடலூர் (தனி) 3. குன்னூர் )

20. திருச்சி மாநகர் மாவட்டம் வெல்லமண்டி நடராஜன் (1. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) 2. திருச்சிராப்பள்ளி (மேற்கு) 3. துறையூர் (தனி) )

21. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஆ. பரஞ்ஜோதி (1. ஸ்ரீரங்கம் 2. மணச்சநல்லூர் 3. முசிறி )

22. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் குமார், (1. மணப்பாறை 2. திருவெறும்பூர் 3. லால்குடி )

23. நாகப்பட்டினம் மாவட்டம் ஓ.எஸ். மணியன் ( 1. நாகப்பட்டினம் 2. கீழ்வேலூர் (தனி) 3. வேதாரண்யம் )

24. மயிலாடுதுறை மாவட்டம் செந்தில்நாதன் (1. மயிலாடுதுறை 2. பூம்புகார் 3. சீர்காழி (தனி))

25. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் விஸ்வநாதன் (1. நத்தம் 2. ஆத்தூர் 3. நிலக்கோட்டை (தனி) 4. பழனி)

26. திண்டுக்கல் மேற்கு மாவட்டம் திண்டுக்கல் வி.சீனிவாசன்,(1. திண்டுக்கல் 2. வேடசந்தூர் 3. ஒட்டன்சத்திரம்)

27. திருநெல்வேலி மாவட்டம் தச்சை என்.கணேசராஜா (1. திருநெல்வேலி 2. பாளையங்கோட்டை 3. அம்பாசமுத்திரம் 4. நாங்குநேரி 5. ராதாபுரம்)

28. தென்காசி வடக்கு மாவட்டம் கிருஷ்ணமுரளி, (1. கடையநல்லூர் 2. சங்கரன்கோவில் (தனி) 3. வாசுதேவநல்லூர் (தனி) )

29. தென்காசி தெற்கு மாவட்டம் செல்வமோகன்தாஸ் பாண்டியன், (1. தென்காசி 2. ஆலங்குளம்)

30. திருவண்ணாமலை (வடக்கு) மாவட்டம். தூசி மோகன் (1.ஆரணி, 2.கலசப்பாக்கம், 3.செய்யாறு 4.வந்தவாசி)

31. திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டம் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (1.திருவண்ணாமலை, 2.போளுர், 3.கீழ்பென்னாத்தூர், 4.செங்கம்)

கட்சி அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சிப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்”.

இவ்வாறு இருவரும் தெரிவித்துள்ளனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் மாவட்டத்தை பிரிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x