Published : 25 Jul 2020 21:11 pm

Updated : 25 Jul 2020 22:06 pm

 

Published : 25 Jul 2020 09:11 PM
Last Updated : 25 Jul 2020 10:06 PM

அதிமுகவில் கட்சி நிர்வாகிகள் அதிரடி மாற்றம், புதிய நியமனம், நீக்கம்

action-change-new-appointment-of-party-executives-in-aiadmk


அதிமுகவில் அதிரடியாக கட்சி அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டுள்ளனர், சில நீக்கப்பட்டுள்ளனர், இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ்.இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு
“அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.


அமைப்புச் செயலாளர்கள்:

1. ஏ. கருப்பசாமி பாண்டியன் ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருநெல்வேலி மாவட்டம் )
2. திருப்பூர் ஊ. சிவசாமி, ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திருப்பூர் மாநகர் மாவட்டம் )
3. இசக்கி சுப்பையா, (முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் )
4. புத்திச்சந்திரன் ( முன்னாள் அமைச்சர், நீலகிரி மாவட்டம் )
5. ரத்தினவேல், ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திருச்சி மாவட்டம் )
6. மருதராஜ் ( திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் )
7. ராஜேந்திரன், ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தென்காசி தெற்கு மாவட்டம் )
8. திருத்தணி கோ. அரி, ( திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் )
9. வாலாஜாபாத் பா. கணேசன், ( காஞ்சிபுரம் மாவட்டம் )
10. ஆசைமணி, ( மயிலாடுதுறை மாவட்டம் )
11. சீனிவாசன், ( திருநெல்வேலி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைத் தலைவர் )

கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்:

1. மாஃபா. பாண்டியராஜன், ( தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் )
2. பாப்புலர் ஏ. முத்தையா ( திருநெல்வேலி மாநகர் மாவட்டம் )
3. நடிகை விந்தியா ( தியாகராய நகர், தென் சென்னை வடக்கு மாவட்டம் )

இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்

டாக்டர் வி.பி.பி.பரமசிவம், ( வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் துணைச் செயலாளர் )

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்:

தலைவர் - டி.கே.சின்னையா, (முன்னாள் அமைச்சர், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்)
இணைச் செயலாளர்கள் -

1. ஆ. இளவரசன், ( அண்ணாமலைநகர், திருச்சி )
2. ப. குமாரசாமி, ( திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் )
3. தண்டரை மு. மனோகரன், ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் )

துணைச் செயலாளர் - துரைமுருகன், ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பல்லடம் தொகுதி )

புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் -

மு. சிங்காரம், ( தருமபுரி மாவட்டம்)
எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி
இணைச் செயலாளர் அ. மனோகரன், ( வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி, தென்காசி வடக்கு மாவட்டம் )

மகளிர் அணி

இணைச் செயலாளர் - கணிதா சம்பத், ( செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்)

வழக்கறிஞர் பிரிவு

இணைச் செயலாளர் - பாபு முருகவேல்,( செய்தித் தொடர்பாளர் )

விவசாயப் பிரிவு நிர்வாகிகள்

துணைச் செயலாளர்கள் - முருகமலை சின்னசாமி ( தேனி மாவட்டம் ) , ராமச்சந்திரன் (காமநாயக்கன்பாளையம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம்)

மருத்துவர் அணி

இணைச் செயலாளர் - டாக்டர் வி.எஸ்.விஜய்,( முன்னாள் அமைச்சர், வேலூர் மாநகர் மாவட்டம்)

தென்காசி தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் - பிரபாகரன்

இவ்வாறு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல நிர்வாகிகளை பொறுப்பிலிருந்தும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நீக்கப்பட்டவர்கள் விவரம்:

அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ. சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பரஞ்ஜோதி. காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வாலாஜாபாத் பா. கணேசன். நீலகிரி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆ. புத்திச்சந்திரன். திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டச்செயலாளர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரத்தினவேல், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ. மருதராஜ். திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பிரபாகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஆ. இளவரசன், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வி.ரமணா, மாதவரம் ஏ. மூர்த்தி டி.கே.எம். சின்னையா.எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வர்த்தக அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் அம்மன் மு. அர்ச்சுணன். இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்”.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!



Action changeNew appointmentParty executivesAIADMKOpsEpsஅதிமுககட்சி நிர்வாகிகள்அதிரடி மாற்றம்புதிய நியமனம்இபிஎஸ்ஓபிஎஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x