கரோனாவால் உயிரிழந்த அருப்புக்கோட்டை ஏட்டு குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி

கரோனாவால் உயிரிழந்த அருப்புக்கோட்டை ஏட்டு குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கரோனா பாதித்து உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து காவல் பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி ஏட்டு ஜெயப்பிரகாஷ் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிவகாசி அருகே சித்துராஜபுரம் ராமசாமி நகரில் உள்ள ஏட்டு ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு நேரில் சென்ற பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, தனது சொந்த நிதி ரூ.3 லட்சத்தை உயிரிழந்த ஏட்டு ஜெயப்பிரகாஷ் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன், அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in