திருநெல்வேலியில் கடந்த 12 நாட்களில் 1512 பேருக்கு கரோனா பாதிப்பு

திருநெல்வேலியில் கடந்த 12 நாட்களில் 1512 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் புதியதாக 1512 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி மொத்தம் 1875 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் 868 பேர் சிகிச்சை பெற்று திரும்பியிருந்தனர். 996 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக இருந்தது.

இந்நிலையில் நேற்று வரை 3387 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 1909 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். 1459 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருந்தது. கடந்த 12 நாட்களில் மட்டும் 1512 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்திருக்கிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 46, அம்பாசமுத்திரம் 42, சேரன்மகாதேவி 16, களக்காடு 5, மானூர் 2, நாங்குநேரி 12, பாளையங்கோட்டை 27, பாப்பாக்குடி 13, ராதாபுரம் 2, வள்ளியூர் 11 என்று மொத்தம் 176 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலையில் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in