

சென்னை பெருநகர போலீஸாருக்கு கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள, மன அழுத்தத்திலிருந்து விடுபட இணையதளம் வழியாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இப்பயிற்சியை தொடங்கி வைத்தார். .
சென்னை கரோனா தடுப்புப்பணியில் முன்கள வீரர்களாக காவல்துறையினர் பணியாற்றுகின்றனர். பணிச்சுமை காரணமாகவும், பொதுமக்களிடம் அணுகும் விதத்திலும் போலீஸார் மன அழுத்தம் காரணமாக ஒரு சில இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான போலீஸார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குன் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும், மன அழுத்தம் குறையவும் யோகா மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சி நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இன்று 25.07.2020 காலை 07.00 மணி முதல் 08.30 மணி வரை சென்னை பெருநகர் காவல் துறையில் பணிபுரியும். காவல் ஆணையாளர் முதல் போலீஸார் வரை சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அவரவர் பணிபுரியும் அலுவலகங்களிலிருந்தே இப்பயிற்சியை மேற்கொள்ள வழிகாட்டப்பட்டது.
உலகம் முழுவதும் தற்போது விரைவாக பரவிக்கொண்டிருக்கும் “கரோனா வைரஸ்” நோய்த்தொற்றிலிருந்து தடுப்பதற்காகவும், தற்காத்துக் கொள்வதற்காகவும். மேலும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான “பிராணாசக்தி மற்றும் பத்ரிகா பிராணாயாமம்” ஆகியவை மற்றும் உணவு. உறக்கம். மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான யோகாசனப்பயிற்சி “வாழும் கலை அமைப்பு மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டது,
இந்த பயிற்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளருடன் கூடுதல் ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு. இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களின் துணை ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் முதல் கடைகோடி போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் தலைமையிடம், ஆயுதப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் மற்றும் அவர்களின் கீழ் இயங்கும் கூடுதல் ஆணையாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர்கள் முதல் சிறப்பு பிரிவில் பணிபுரியும் போலீஸார் வரை கரோனா தொற்றில் இருந்து விடுபடவும். பாதுகாப்பாக இருக்கவும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்வுடன் பணியில் வரும் சவால்களை எதிர்கொள்ளவும் பயிற்சி கொடுக்கப்பட்டது.