கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு: சாகித்ய அகாடமி அறிவிப்பு

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு: சாகித்ய அகாடமி அறிவிப்பு
Updated on
1 min read

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப் படும் என சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.

வைகை அணை கட்டப்பட்ட போது காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாக கொண்டு ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலை கவிஞர் வைரமுத்து எழுதினார். மண்சார்ந்த மக்கள், மண்ணோடும், வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலி யோடு இதில் அவர் பதிவு செய் துள்ளார்.

வட்டார வழக்கோடு எழுதப் பட்ட இந்த நாவலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இதுவரை 1 லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

‘‘ஆங்கிலம், அசாமி, வங் காளி, போடா, டோக்ரி, குஜ ராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலை யாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ் தானி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தெலுங்கு, உருது ஆகிய 23 மொழிகளில் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை மொழி பெயர்க்கும் பணி விரைவில் தொடங்கும்’’ என சாகித்ய அகாடமி யின் செயலாளர் சீனிவாசராவ், கவிஞர் வைரமுத்துவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து வைரமுத்துவிடம் கேட்டபோது, ‘‘இந்த மொழி பெயர்ப்பு முயற்சி, தமிழுக்கும், இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாசாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு முடிந்ததும் அந்தந்த மாநில தலைநகரங்களில் நாவல் அறிமுக விழா நடத்தப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in