Published : 17 Sep 2015 11:25 AM
Last Updated : 17 Sep 2015 11:25 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்: கட்டுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச் சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளி மாணவி ஒருவர் அண்மையில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள் ளது. நோயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுவால் பரவுகிறது. கடுமை யான காய்ச்சல், சருமத்தில் கட்டிகள் அல்லது வெடிப்புகள் நோய் தொற்றிய 3 முதல் 4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும். மேலும், தசை வலி, மூட்டுகளில் வலி, தலைவலி ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

அத்துடன், டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் எண்ணிக்கை குறையும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்நோய் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. அண்மையில், ஆவடியில் 6-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் டெங்கு பாதித்து உயிரிழந்தார்.

இதேபோல், ஏராளமான சிறார்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்நோயைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது: டெங்கு காய்ச்சல் திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகி றது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இதை மறுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித் துள்ளது.

உண்மையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட நகராட்சி களில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர் வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மோகனன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி இருப்பது என்பது உண்மைதான்.

ஆனால், இந்நோயால் யாரும் உயிரிழக்கவில்லை. இந்நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வீடு வீடாகச் சென்று மருந்து தெளித்து வருகின்றனர்.

அதேபோல், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்குத் தேவை யான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் இந்நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x