ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
Updated on
1 min read

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 7200 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும், காவிரி கரையோரப்பகுதியில் உள்ள காடுகளில் பெய்யும் மழையாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் விநாடிக்கு 7,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 7,200 கன அடியாக அதிகரித்தது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக அரூரில் 44 மி.மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, பாலக்கோட்டில் 34 மி.மீட்டரும், பென்னாகரத்தில் 28 மி.மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 18 மி.மீட்டரும், மாரண்ட அள்ளியில் 15 மி.மீட்டரும், ஒகேனக்கல்லில் 4.6 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in