

சேலம்: ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை ஆவின் முகவர்களாக நியமிப்பதற்கு, ஆவின் முகவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆவின் பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆவின் முகவர்களாக 1.5 லட்சம் பேர் உள்ளனர். தற்போது, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முகவர் உரிமம் கொடுத்தால், ஏற்கெனவே உள்ள முகவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு வேறு வழிகளில் உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.