தூய்மைப் பணியாளர்களுக்கு மனநலப் பயிற்சி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

நாமக்கல்: திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மனநலப் பயிற்சி மற்றும் கோவிட்-19 குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஜான்ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் சி.ரமேஷ் பேசியதாவது:

ஆரோக்கியமான மனநலத்திற்கு நல்ல தூக்கம், சந்தோசம், நல்ல உணவு ஆகியவை காரணமாகும். உடலும், மனமும் இயக்கத்தில் இருக்க வேண்டும். மனம் என்பது ஆழ்ந்து செயல்படக்கூடியது என்பதால் மனதை வருத்தப்பட கூடிய செயல்களை செயல்படுத்தும் போது மனம் பாதிக்கப்படுகிறது.

மன அழுத்தத்தை குறைக்க டிரஸ் பால் பயிற்சி மேற்கொள்ளலாம். நாம் சிரிக்கும் போது மனதிற்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பதற்கேற்ப சிரிப்பு மன நலத்திற்கு துணை புரியும், என்றார். இதில் நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in