

தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் மிரர் அக்கவுன்ட் தொடங்கி அதன் மூலமே விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற முறையை கைவிட்டு மீண்டும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலமே கடன் வழங்க அனு மதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 147 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் 350 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ் நாடு மாநில தொடக்க கூட்டு றவு வங்கி அனைத்துப் பணி யாளர்கள் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.துரைக்கண்ணு கூறியது: தமிழகம் முழுவதும் 200 நகர கூட்டுறவு கடன் சங்கங் கள் மற்றும் 4,300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என 4,500 கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளோம்.
இதனால் தமிழகம் முழுவ தும் கூட்டுறவு கடன் சங்கங் களில் சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த் தனை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.
சம்பா சாகுபடி நடைபெற்று வரும் இந்த சமயத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால், விவசாயிகளுக்கு உர விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், பொது விநியோகத் திட்டம் உட்பட மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு நேரிடும்.
இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 200 பணியாளர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 59 கூட்டுறவு வங்கி களில் பணிபுரியும் 287 பணி யாளர்களும் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளனர்.