

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்திப் பெற்ற விழாக்களில் ஒன்றான ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, உண்ணாமுலை அம்மன் சந்நிதி எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. மங்கள இசை ஒலிக்க, வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இதையடுத்து, பராசக்தி அம்மனுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியின் நிறைவு நாளான வரும் ஆக.2-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். கரோனா ஊரடங்கு காரணமாக ஆடிப்பூர விழா, கோயில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.