

திமுகவுடன் மதிமுக கூட்டணி சேராது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருச்சி மணிகண்டத்தில் நேற்று நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ மேலும் பேசியபோது, “இலங்கைத் தமிழர்களுக்கும், மதிமுகவுக்கும் திமுக செய்த துரோகங்களை, கசப்பான அனுபவங்களை மறக்க முடியாது. எனவே, திமுகவுடன் கூட்டணி கிடையாது. தற்போதைய நிலையில் மக்கள் கூட்டியக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். அரசி யல் நிலவரம் குறித்து திருப்பூர் மாநாட்டில் விரிவாக பேசுவேன்” என்றார்.
முன்னதாக, திருச்சி கிராப் பட்டியில் கட்சிக் கொடி ஏற்றி வைத்து பேசியபோது, “தமிழர் களுக்கு எங்கெல்லாம் தீங்கு வருகிறதோ அங்கெல்லாம் அதைத் தடுக்கப் போராடும் நமது உறுதி யால் மக்களின் கனிவுப் பார்வை மதிமுக மீது திரும்பியுள்ளது’’ என்றார்.