இலங்கை பிரதமர் இந்தியா வருகை: 16 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை

இலங்கை பிரதமர் இந்தியா வருகை: 16 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை
Updated on
1 min read

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் இந்திய வரு கையையொட்டி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள் இன்று விடு தலை செய்யப்பட உள்ளனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இன்று டெல்லி வருகிறார். தனது இந்தியப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட் டோரை அவர் சந்தித்துப் பேசு கிறார்.

கடந்த ஜனவரியில் இலங்கை யின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயண மாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அதேபோல ரணில் விக்ர மசிங்கேவும் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வரு கிறார். அப்போது இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசிடம் விரிவான அறிக்கை அளிக்கப்பட உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு மற்றும் சீபா எனப்படும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இலங்கை செல்லும் ‘108’

அதன்படி இந்தியாவில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் அதிநவீன மருத்துவமனைகளை அமைக்கவும் ரூ.53 கோடியே 27 லட்சம் மதிப்புக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்கள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் இந்திய வருகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப் படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் நீதிமன்றங்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கள்கிழமை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in