கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்தவர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர்

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்தவர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர்
Updated on
1 min read

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கந்தசஷ்டி கவசத்தை அவதூறு செய்து உலகத் தமிழர்களை அவமரியாதை செய்துள்ளனர். அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.

கறுப்பர் கூட்டத்தின் செயலை தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஏன் கண்டிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒருசிலரை மட்டும் ஏன் கைது செய்துள்ளது? அனைவரையும் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யவில்லை. அதிமுகவுடன் கருத்து வேறுபாடும் இல்லை.

கரோனா ஊரடங்கு காலத்தில் பாஜகவினர் தமிழகத்தில் 1 கோடி பேருக்கு உணவு பொட்டலம் வழங்கியுள்ளனர். 35 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியுள்ளோம். தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதை செய்யவில்லை. அகில இந்திய தலைமை இதை பாராட்டியிருக்கிறது.

தமிழக அரசு கரனோனா மரணங்களை மறைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து அரசு விசாரித்து மக்களுக்கு விளக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடவில்லை" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in