Published : 18 Sep 2015 12:50 PM
Last Updated : 18 Sep 2015 12:50 PM

அரசுப் பேருந்துகள் நிலையைப் பேச பேரவையில் அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக அரசுப் பேருந்து நிலை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கேரள மாநிலம், கொட்டாரக்கராவுக்கு சென்ற தமிழக அரசு பேருந்தின் உள்புற தரைத்தள பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்து காயமடைந்தார். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அரசுப்பேருந்துகளின் நிலை குறித்து பேரவையில் விவாதம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தன.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 6 வருடங்களையும் தாண்டி 300 பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பலகை வழியாக பெண் கீழே விழுந்த சம்பவத்தையடுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தென்காசி கிளை மேலாளர் சசிகுமார், உதவிப் பொறியாளர் சரவண பெருமாள், தொழில்நுட்ப பணியாளர்கள் கருப்பசாமி, தனபால், பேருந்து ஓட்டுநர் மாடசாமி, நடத்துநர் குமரேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x