

கரோனா தொடர்பான மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் ஜெயக்குமார், “கரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இதனால் அரசுக்கு என்ன ஆதாயம்? கரோனா விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கண்ணுக்கு மட்டுமே இதுபோன்று தெரியும். மக்களை திசைதிருப்பும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்’’ என்றார்.
ரஜினியுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கட்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரம் அவருடன் கூட்டணி பற்றி எங்கள் கட்சிதான் முடிவெடுக்கும்’’ என்றார்.