ஒரு கோடி பேர் பங்கேற்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம்

ஒரு கோடி பேர் பங்கேற்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம்
Updated on
1 min read

வாழும் கலை அமைப்பின் முதுநிலை ஆசிரியர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுமான கே.ஆர்.தாமோதரன், சசிரேகா ஆகியோர் கோவையில் கூறியதாவது:

சர்வதேச ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன், உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய உள்ளனர். சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவச மந்திரங்கள், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பதற்றத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பெங்களூருவில் உள்ள ஆசிரமத்திலிருந்து வரும் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு ஆன்லைன் மூலமாக குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இந்தப் பாராயணத்தை முன்னின்று நடத்துகிறார். இந்த நிகழ்வு முகநூல் (bit.ly/FBKavacham) மற்றும் யூடியூப் மூலம் (bit.ly/YTKavacham) நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தமிழ் மொழி பேசும் மக்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

மேலும், உலகெங்கும் உள்ள மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், தமிழ் சங்கங்கள், முருகர் பக்தி பேரவைகள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள், இந்து அமைப்புகள், கிராமப் பூசாரிகள் பேரவை, துறவியர் சங்கம், கோயில்கள், கல்வி நிறுவனங்கள், சிறுதொழில் முனைவோர் சங்கங்கள் இந்த கந்த சஷ்டி கவசம் மகா பாராயணத்தில் பங்கேற்க உள்ளன என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in