82% பேருக்கு விலையில்லா பொருள் வழங்கல்: உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

82% பேருக்கு விலையில்லா பொருள் வழங்கல்: உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் த.ஆனந்த் முன்னிலையில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 82 சதவீத ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை மாதத்துக்கான விலையில்லா பொருட் கள் வழங்கப்பட்டுள்ளன. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப் பட்டுள்ளன. அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தீர்வை ஏற்படுத்தும்.

கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் கைது, பதிவுகள் நீக்கம் போன்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ததால்தான், தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதிமுக செய்த நலத்திட்டங்களை மக்கள் மறந்துவிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in