கரோனா தொற்றுக்கு திருச்சியில் 6 பேர், புதுச்சேரியில் 3 பேர் உட்பட 12 பேர் மரணம்

கரோனா தொற்றுக்கு திருச்சியில் 6 பேர், புதுச்சேரியில் 3 பேர் உட்பட 12 பேர் மரணம்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற் றால் நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண் ணிக்கை 50-ஐ எட்டியுள்ளது. இதேபோல, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரும், நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். இதே போல, புதுச்சேரியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் 190 பேருக் கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 111 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 48 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 10 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட 6 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 134 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 112 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 79 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் நேற்று 123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 2,421 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன்(67) கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in