

சென்னை புறநகர் பகுதியான மறைமலைநகரில் உள்ள ஒரு வீட்டில், கேஸ் சிலிண்டர் கசிந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மறைமலைநகரில் உணவகம் ஒன்றை நடத்தி வெங்கடேசன். இவர் தனது குடும்பத்தினருடன் மூன்று நாள்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருக்கிறார். உணவகத்துக்குப் பயன்படுத்தப்படும் 8 சமையல் எரிவாயு சிலிண்டர்களை தனது வீட்டில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்றிரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது, சிலிண்டரில் கேஸ் கசிவை உணராமல் மின் சுவிட்சை இட்டதால் விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
இந்த விபத்தில் வெங்கடேசன், அவரது மனைவி, குழந்தை மற்றும் பக்கத்து குழந்தை ஆகிய நான்கு பேர் பலியாயிகினர். ஒரு குழந்தை உள்பட இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.