9 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது: கருணாநிதி மீதான உரிமை மீறல் புகாரில் நடவடிக்கை?

9 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது: கருணாநிதி மீதான உரிமை மீறல் புகாரில் நடவடிக்கை?
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை, 9 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது.

அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத் துக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 19 அலுவல் நாட்களைக் கொண்ட கூட்டத்தொடர் இம்மாதம் 29-ம் தேதியுடன் முடிகிறது. இதுவரை 9 நாட்கள் பேரவை நடந்துள்ளது.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 9,10 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டி இருந்ததால் கடந்த 5-ம் தேதி முதல் 13-ம் தேதி (நேற்று) வரை பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

9 நாட்கள் விடுமுறை முடிந்து பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. பேரவையில் இன்று வருவாய், செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது. விவாதங்க ளுக்கு பதிலளித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதிலளிக்கின்றனர்.

பேரவையில் தான் பேசாததை பேசியதாக முரசொலியில் எழுதி யுள்ளதாக கூறி, திமுக தலைவர் கருணாநிதி மீது கடந்த 31-ம் தேதி வேளாண் அமைச்சர் வைத்தி லிங்கம் உரிமை மீறல் புகார் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர், உரிமை மீறல் குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உரிமைக் குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு குறித்த அறிக்கை, பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in