

டீசல் விலை உயர்வைக் கண்டித்து, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் 5,000 லாரிகள் நேற்று ஓடவில்லை. துறை முகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும், காலாவதி யான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், லாரி வாங்கியதற்கான மாத தவணைக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.