Published : 19 Sep 2015 10:22 AM
Last Updated : 19 Sep 2015 10:22 AM

தடுப்பணை போன்ற கட்டமைப்பால் பாறை நிரம்பிய பகுதி பசுமையானது: மழைநீர் சேமிப்பில் புதுமை - உடுமலை விவசாயி சாதனை

உடுமலை அருகே விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாறைகளை உடைத்து 15 இடங்களில் மழை நீர் சேமிப்புக்கென தடுப்பணை போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது பாலாறு. இங்கு திருமூர்த்தி அணை அருகில் இருந்தாலும் அதன்மூலம் நீர் கிடைக்காத பகுதியாகவே உள்ளது. இதனால் மழை நீர் மட்டுமே பாசனத்துக்கான முக்கிய நீர் ஆதாரம்.

திருமூர்த்தி அணை நிரம்பினால் வெளியேற்றப்படும் உபரி நீர் பாலாறு மூலம் திறக்கப்படும். அவ்வளவு எளிதில் அணை நிரம்பாது என்பதால் உபரி நீர் திறப்பு மிகவும் அரிதான நிகழ்வு என்கின்றர் விவசாயிகள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண் ணீர் வரத்து இல்லாமல் விவசாயம் நலிவை சந்தித்து வருகிறது.

இதனால் ஆழ்குழாய் மற்றும் கிணற்று நீர் பாசனம்தான் அங்குள்ள விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நீராதாரம். ஆகவே பெரும்பாலான விவசாயிகள் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் கிணற்று நீரைக் கொண்டு தென்னை உள்ளிட்ட பாசனத்தை மேற் கொண்டு வருகின்றனர்.

தண்ணீரின் நிலை இப்படி இருக்க, அதே பகுதியில் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான கரடு முரடான பாறைகள் நிறைந்த நிலத்தை பக்குவப்படுத்தி, பசுஞ்சோலையாக மாற்றி சாதனை புரிந் துள்ளார்.

கேரளத்தை பூர்வீகமாக கொண் டவர் ஜோசப் பாப்லே (64). அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பாலாறு துறையில் அவருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் செழுமையான விவசாயம் செய்து ஓய்வுக் காலத்தை கழித்து வருகி றார்.

இது குறித்து அவர் கூறியதா வது: ‘‘கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் குறைவான விலையில் கிடைத்த தால் தண்ணீர் வசதியே இல்லாத வறண்ட பாறைகளால் ஆன 40 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அதில் படிப்படியாக பாறைகளை உடைத்து, அதனையே மழை நீரை தேக்கும் அரணாக அமைத்தேன். அதன்படி சுமார் 50 ஆயிரம் டன் கற்கள் கிடைத்துள்ளன.

கேரள மாநிலத்தில் இருப்பதைப் போல மேலிருந்து கீழாக 15 இடங் களில் தடுப்பணை போன்ற நீர் சேகரிப்பு அடுக்குகளை ஏற்படுத்தி னேன். கற்களை வரிசையாக அடுக்குவதன் மூலம் இந்த அடுக் குகளை உருவாக்கினேன். அதே போல நிலமட்டத்தில் இருந்து, சுமார் 800 அடி உயரமான பாறை களை உடைத்து அங்கும் சுமார் 3000 மீட்டர் சுற்றளவுக்கு கல் வரிசையை உருவாக்கினேன்.

இவ்வாறு 3 இடங்களில் கிணறு கள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு பெய்யும் மழை நீர் ஒரு சொட்டுக் கூட வெளியில் வீணாகாத வகை யில் சேகரிப்பு முறையை உருவாக் கியுள்ளேன்.

அதன் மூலம் 20 ஏக்கரில் தென் னையும், 8 ஏக்கரில் நெல்லியும், இரண்டரை ஏக்கரில் முந்திரியும் விளைகின்றன. இதுதவிர 3 ஆயிரம் கோகோ, ஆயிரம் வெண்ணிலா, எள் ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறேன். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல, நீர் சேமிப்பு முறையால், சுற்றியுள்ள விவசாயிகளின் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது’’ என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x