

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 327 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,914-ஆக இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் இன்று மேலும் 327 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 4,241 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள், கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.